இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோருடன் சேர்ந்து நடிப்பது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்குப் பதிலளித்த ஆமிர் கான், “நாங்கள் மூவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நான், ஷாருக், சல்மான் மூன்று பேரும் இதுகுறித்து ஏற்கெனவே பேசியிருக்கிறோம்.
அதற்கான ஒரு நல்ல கதை கிடைக்கும் என்று நம்புகிறேன். சேர்ந்து நடிக்க நாங்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம். இதுதான் அதற்கான சரியான நேரம் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours