சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `வானத்தைப் போல’. இந்தத் தொடர் தற்போது ஆயிரம் எபிசோட்களைக் கடந்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இருவரும் அந்தத் தொடரில் இருந்து வெளியேற அதற்குப் பிறகு நடிகர் ஶ்ரீ இணைந்தார். அண்ணன் – தங்கை பாசத்தை மட்டுமே மையமாக வைத்து இந்தக் கதையின் ஓட்டம் நகர்ந்தது. நடிகர் ஶ்ரீ இந்தத் தொடருக்குள் வந்த பிறகு சண்டைக் காட்சிகள் அதிகமாக தொடரில் இடம் பெற்றன.
தற்போது அந்தத் தொடரின் 1000 -வது எபிசோட் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. அதில் இந்தத் தொடரில் நடித்த, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதள பக்கங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
சன் டிவியில் வரவிருக்கும் தொடர் `லட்சுமி’. இந்தத் தொடரில் சஞ்சீவ் – ஸ்ருதி நடிக்கிறார்கள். இந்தத் தொடர் வருகிற திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. `திருமதி செல்வம்’ தொடருக்குப் பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து இந்தத் தொடரில் நடிகை ரிந்தியாவும் நடிக்கிறார். `லட்சுமி’ மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதால் ஏற்கெனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
வருகிற திங்கட்கிழமை முதல் மீனா தொடர் காலை 11 மணிக்கும், அருவி 12 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது. லட்சுமி தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் `ஈரமான ரோஜாவே’. இந்தத் தொடரின் இரண்டு சீசன்களிலும் நடித்திருந்தவர் திரவியம். டிவி வட்டாரத்தில் இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் புதியதாக வரவிருக்கும் தொடர் ஒன்றில் திரவியம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவருக்கு ஜோடியாக ஷ்ரித்தா நடிக்கிறாராம். ஷ்ரித்தா நடிகர் சந்தானத்துடன் இணைந்து `தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான `நம்ம வீட்டு மீனாட்சி’ தொடரிலும் நடித்திருந்தார். விரைவிலேயே இந்தத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours