1999ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்தியாவை சேர்ந்த யுக்தா முகே. உலக அழகியானதும் பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. எனவே 2008ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரின்ஸ் துலி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். மகன் பிறந்த பிறகு கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. கணவரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் யுக்தா முகே அமெரிக்க போலீஸில் புகார் செய்தார்.
ஒருகட்டத்தில் இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து யுக்தா முகே அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்துவிட்டார். மும்பையில் தன் பெற்றோர் வீட்டில் வசிக்கும் யுக்தா முகே சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 2024ம் ஆண்டுக்கான உலக அழகி விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் உலக அழகி என்ற முறையில் கலந்து கொண்டார்.
அவரைப் பார்த்தவுடன் யாராலும் அவரை அளையாளம் காணமுடியவில்லை. கணவனுடன் ஏற்பட்ட மன ரீதியான அழுத்தங்களால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என அவரின் நண்பர்கள் பலரும் வேதனைப்பட்டனர். அடுத்து வெப்சீரிஸ் போன்ற எதிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்று யுக்தா முகே தேடிக்கொண்டிருக்கிறார். யுக்தா முகே சேலை கட்டிக்கொண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு மும்பையில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
+ There are no comments
Add yours