Nayanthara Net Worth 2024 : படங்கள், தயாரிப்பு நிறுவனம், அழகு சாதன தொழில் என மிகவும் பிஸிதாக இருக்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்..
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா:
கோலிவுட் திரையுலகில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொடு கட்டி பறந்து காெண்டிருப்பவர், நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் நுழைந்த நயன்தாரா, ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்திக்கு ஜோடியாக நடித்தார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்தார். அதைத்தொடர்ந்து பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்றளவும் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
காதல் திருமணம்:
இதையடுத்து, இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை வைத்து 2015ஆம் ஆண்டு ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். இதில் ஒன்றாக பணிபுரிந்த போது இருவரும் காதலில் விழுந்தனர். பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகைத்தாய் மூலம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என வித்தியாசமான பெயர் சூட்டி உள்ளனர்.
மேலும் படிக்க | Guess Who: ரஜினிக்கு அருகில் நிற்கும் இந்த சிறுவன் இப்போ டாப் ஹீரோ! யார் தெரியுமா?
தொழிலதிபராக மாறிய நயன்:
இப்படி வளர்ச்சிகளின் உச்சத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் நயன்தாரா சமீபத்தில் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். 9ஸ்கின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பிராண்டில் லிப் பாம், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி Femi9 என்கிற சானிடரி நாப்கின் பிராண்டை துவக்கி நடத்தி வருகிறார்.
பாலிவுட்டில் கால் பதித்து உயர் விருதை பெற்றார்:
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகிய நயன்தாரா அண்மையில் இந்த படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார்.
நயன்தாராவின் சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போது சினிமாவை ஆட்சி செய்து வரும் நயன்தாராவின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்த தகவல் உண்மையா ? இல்லையா ? என்பது பற்றி தெரியவில்லை. அதுமட்டுமின்றி தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கும் நயன்தாராவுக்கு சென்னை மற்றும் மும்பையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா இருக்கிறது.
விதவிதமான சொகுசு கார்:
மேலும், இவர் தனது சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனர், தனது ஆசை மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடம்பர காரை பரிசாக அளித்திருந்தார். இது ‘மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேட்ச்’ (Mercedes-Benz Maybach) வகை கார் ஆகும். இதன் விலை சுமார் ரூ.2.69 கோடியில் இருந்து 3.40 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிரேமலு புகழ் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கும் முதல் தமிழ் படம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours