“வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அதிமுகவிற்கு தேர்தல் பிரசாரம் செய்வேன்…” என்று தெரிவித்துள்ளார் நகைச்சுவை நடிகர் வையாபுரி.

மதுரையில் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கிக் கொண்டிருக்கும் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “உணவில்லாதவர்களுக்கு ஒருநேரமாவது மக்கள் உணவளிக்க வேண்டும். அந்த வகையில் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நெல்லை பாலு, கோவிட் காலம் முதல் தற்போது வரை உணவு வழங்கி வருவது சிறப்பானது…..” என்றவர்,
தொடர்ந்து பேசும்போது, “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், வாய்ப்பு கிடைத்தால், ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அதிமுகவிற்கு தேர்தல் பிரசாரம் செய்வேன்.

என்னுடைய பிரசாரம் பிற கட்சியையோ, பிற நபர்களையோ வசை பாடுவதாக இருக்காது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் தமிழக மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி பிரசாரம் செய்வேன்.
பாசக்கார ஊர் என்றால் அது மதுரைதான். நான் பிறந்தது தேனி மாவட்டம் என்றாலும் இங்கு நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறேன்.

தற்போது உள்ள சூழலில் வில்லன், கதாநாயகியின் தந்தை போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். வில்லன்கள் காமெடியன் ஆகிவிட்டார்கள், காமெடியன்கள் வில்லனாகிவையாவையா விட்டனர். இந்நிலையில் கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் நானும் கதாநாயகனாக நடிப்பேன்” என்றார்.
+ There are no comments
Add yours