‘Dunkirk’, ‘Inception’, ‘Memento’ என தன் திரைப்படங்களுக்காக 8 முறை ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் தேர்வாகி விருதுகளைத் தவறவிட்ட கிறிஸ்டோபர் நோலன், இம்முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை முதன் முதலாகப் பெற்றார். சமீபத்தில் நடந்த கோல்டன் குளோப் விருதுகளிலும் இப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதை முதன் முதலாக வென்றார் நோலன்.
ஆஸ்கர் விருது விழா மேடையில் பேசிய நோலன், “எனது சக கலைஞர்களின் மத்தியில் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, மிகச்சிறப்பாக நடித்திருந்த கிலியன் மர்பிக்கு நன்றி. என் படத்திற்குத் தயாரிப்பாளராகவும், என்னுடைய குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இருக்கும் என் மனைவி எம்மா தாமஸுக்கு நன்றி. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இந்த அகாடமி திரைப்படங்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்தப் பயணம் இன்னும் எதை நோக்கிச் செல்லும் என்று தெரியாது. ஆனால், நான் அதில் ஒரு பகுதியாக இருந்து அதற்கு அர்த்தம் சேர்ப்பேன் என்று நினைக்கிறேன். என்னுடைய திரைப்பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
முதன் முதலாக ஆஸ்கரை வென்ற கிறிஸ்டோபர் நோலனுக்கு திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours