2024ம் ஆண்டுக்கான 96-வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரைப் பட்டியலில் ‘Oppenheimer’ 13 விருதுகளுக்கும், ‘Poor Things’ 11 விருதுகளுக்கும், ‘Killers of the Flower Moon’ 10 விருதுகளுக்கும், ‘Barbie’ 8 விருதுகளுக்கும், ‘Maestro’ 7 விருதுகளுக்கும் தேர்வாகியிருந்தன. இதில் சிறந்த இயக்கத்திற்கான விருதினை கிறிஸ்டோபர் நோலன் மற்றும் மார்ட்டின் ஸ்கார்செஸி இருவரில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து. அதேசமயம், ‘ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer)’ மற்றும் ‘Killers of the Flower Moon’ இரண்டு படங்களில் எது சிறந்த திரைப்படம் மற்றும் அதிக விருதுகளைக் குவிக்கப் போகும் படம் என்ற போட்டி இருந்தது.

இந்நிலையில் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதினை கிறிஸ்டோபர் நோலன் தட்டிச் சென்றுள்ளார். இது அவரின் முதல் ஆஸ்கர் விருதாகும்.
மார்ட்டின் ஸ்கார்செஸி, அதிக முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார். இதுவரை 14 முறை ஆஸ்கர் போட்டியில் இடம்பெற்றுள்ளார். கடைசியாக ‘The Departed’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதினை வென்றிருந்தார்.

சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் (Poor Things) மற்றும் சிறந்த நடிகருக்கான விருதை கிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்) மூன்) தட்டிச் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக ‘ஓப்பன்ஹெய்மர்’ ஏழு விருதுகளையும், ‘Poor Things’ திரைப்படம் நான்கு விருதுகளையும் வென்றுள்ளது.
+ There are no comments
Add yours