Latest Cinema News Actress Varalaxmi Sarathkumar Gives Reply To Everyone Who Trolled Her Boyfriend Nicholai Sachdev

Estimated read time 1 min read

Varalaxmi Sarathkumar Posts About Her Future Husband And Boyfriend Nicholai Sachdev : நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவரது வருங்கால கணவர் குறித்து எக்கச்சக்க பேச்சுகள் அடிபட்ட நிலையில், கடுப்பான வரலட்சுமி தடாலடியாக இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்துள்ளார். என்ன நடந்தது? 

பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரோடு நீண்ட காலமாக காதலில் இருந்த வரலட்சுமி, இந்த ஆண்டு திருமணம் வரை தங்கள் உறவை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் மும்பையில் எளிமையாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. 

நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானதும், பலரும் யார் அந்த நிக்கோலாய் என தேடி ஆராய்ந்தனர். அப்போது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதோடு அவரது முதல் மனைவி கவிதாவுடன் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் நெட்டிசன்கள், நீங்கள் இரண்டாவது மனைவியா? என கேள்வி கேட்டு கண்டபடி கமெண்ட் செய்து வந்தனர். 

பொதுவாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வரலட்சுமி, இந்த விவகாரத்தையும் தன் ஸ்டைலில் கையாண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நான் கவலைப்பட மாட்டேன். பெண்கள் எப்போதும் மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும், உங்களைப் பற்றி பேசுபவர்கள் உங்களுடன் எப்போதும் பயணிக்கப்போவதில்லை. நீங்கள் தான் வாழ்க்கை முழுவதும் உங்களுக்காக இருக்கப்போகிறீர்கள்.” என்று எழுதியுள்ளார். 

இதன் மூலம் தனது வருங்கால கணவர் குறித்த பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்து வரலட்சுமி சரத்குமார் தன்னை விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.

மேலும் படிக்க | மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு

வரலட்சுமியின் வருங்கால கணவர் யார்?

வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் உள்ளதாக கூறப்பட்டது. இதனால்தான் பலரும் ஒவ்வொரு வகையிலான கருத்துகளை தெரிவித்தனர். வரலட்சுமி திருமணம் செய்து கொள்ள இருக்க நபரின் பெயர், நிக்கோலாய் சாக்தேவ். இவருக்கு விவாகரத்து ஆகி, பல ஆண்டுகளுக்கு பிறகுதான் வரலட்சுமி இவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. நிக்கோலாய், செலிபிரிட்டி புகைப்பட கலைஞராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர், வரலட்சுமியை நிச்சயதார்த்தம் செய்து கொள்வதற்கு முன்னரே அவரது குடும்பத்தினருடன் நன்கு பழகியவராக இருக்கிறார். இவரும் சரத்குமாரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகின்றன. 

மேலும் படிக்க | வரலக்‌ஷ்மியின் வருங்கால கணவர் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours