இப்படியான மேடை நாடகங்களில் மட்டுமே முதலில் நடித்துக் கொண்டிருந்தார். ஷேக்ஸ்பியர் நாடகம் உட்படப் பல நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த மேடை நாடகங்களே இவரின் சினிமா தளத்திற்கு அடிக்கல் நாட்டியது. ‘டிஸ்கோ பிக்ஸ்’ (Disco Pigs) என்ற மேடை நாடகத்தை விரித்து திரைப்படமாக எடுத்தார்கள். இத்திரைப்படம் மக்களிடம் நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி கிலியன் மர்ஃபியின் கரியரும் அதே இடத்தில்தான் டேக் ஆஃப் ஆனது. மக்களின் ஏகோபித்த வரவேற்பு இவருக்கு ஊக்கத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வெற்றிப் பாதையில் நெடுந்தூரம் பயணிக்க வைத்தது.
இப்படியான பல வெற்றிகளைச் சுவைத்த பிறகு முதல் முறையாக 2005-ம் ஆண்டு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுடன் ‘பேட்மேன் பிகின்ஸ்’ திரைப்படத்தில் கூட்டணி சேர்ந்தார். பரஸ்பர புரிதலுக்குப் பிறகு தொடர்ந்து இந்தக் கூட்டணி இணைந்து அடுத்தடுத்து ‘இன்செப்ஷன்’, ‘டன்கிரிக்’ என அதிரடியான வெற்றிப் படைப்புகளைக் கொடுத்தது. முதலில் ‘பேட்மேன் பிகின்ஸ்’ திரைப்படத்தின் பேட்மேன் கதாபாத்திரத்திற்குத்தான் இவரை ஆடிசனுக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால், கிலியன் மர்ஃபியோ, “எனக்கு இப்படியான சூப்பர் ஹீரோ உடல்மொழி சரியான பொருந்திப்போகாது” எனக் கூறியிருக்கிறார்.
கதையின் நாயகனாக மட்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் ‘ரெட் ஐ’ என்ற திரைப்படத்தில் தோன்றி பார்வையாளர்களை அசர வைத்தார். அன்றைய தேதியில் வெளியான நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் இவரைப் பற்றிய பேச்சுதான். எம்.ஜி.ஆரும் அவரே, நம்பியாரும் அவரே!
+ There are no comments
Add yours