ஜிம்மி கிம்மல் 4வது முறையாக இவ்விருது விழாவைத் தொகுத்து வழங்கினார். இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி நடித்துள்ள “ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் விருதை வென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகர் விருதை ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்திற்காக சிலியன் மர்ஃபி வென்றிருக்கிறார். அதேபோல சிறந்த நடிகை விருதை ‘புவர் திங்ஸ்’ படத்திற்காக எம்மா ஸ்டோன் பெற்றிருக்கிறார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடக்கும் பல சம்பவங்கள் எப்போதும் பேசு பொருளாவது வழக்கம். அந்தவகையில் இந்த 96வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் செனா ‘புவர் திங்ஸ்’ படத்திற்காகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடைகளின்றி மேடைக்கு வந்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பிப் பேசு பொருளாகி இருக்கிறது.
+ There are no comments
Add yours