அமெரிக்க வசூலில் முதல் சாதனை படைத்த ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’
11 மார், 2024 – 11:33 IST
மலையாளத் திரைப்படம் ஒன்று தமிழகத்திலும், அமெரிக்காவிலும் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படம்தான் அது என்பதை ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இதுவரையில் எந்த ஒரு மலையாளப் படத்திற்கும் ஓபனிங்கிலேயே இப்படி ஒரு வரவேற்பு தமிழகத்தில் கிடைத்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது போலவே அமெரிக்காவிலும் மலையாளத் திரையுலக வரலாற்றில் முதல் சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
அங்கு ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகால மலையாள சினிமா வரலாற்றில் ஒரு மலையாளப் படம் 1 மில்லியன் டாலர் சாதனையைப் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல. மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது படங்கள் கூட அப்படிப்பட்ட சாதனையைப் புரியவில்லை. இளம் கலைஞர்கள் பங்கு பெற்ற ஒரு படம் புரிந்திருக்கிறது.
கடந்த வாரம் 100 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் தற்போது 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours