4வது பெண் குழந்தைக்கு தாய் ஆனார் வொண்டர் வுமன்

Estimated read time 1 min read

4வது பெண் குழந்தைக்கு தாய் ஆனார் ‘வொண்டர் வுமன்’

09 மார், 2024 – 10:38 IST

எழுத்தின் அளவு:


Wonder-Woman-becomes-mother-to-4th-baby-girl

ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் வொண்டர் வுமன் கேரக்டர் உலக புகழ் பெற்றது. இந்த கேரக்டருக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் கால் கடோட். பேட்மேன் வெசஸ் சூப்பர்மேன், வொண்டர் வுமன், வொண்டர் வுமன் 1984, ஜஸ்டிஸ் லீக் படங்களில் ‘வொண்டர் வுமன் கேரக்டரில் நடித்தார்.

இஸ்ரேலை சேர்ந்த கால் கடோட் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றி ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் மூலம் நடிகை ஆனார். இந்த படத்தின் அத்தனை சீரிஸ்களிலும் நடித்தார். கடைசியாக ‘பாஸ்ட் ஆப் ஸ்டோன்’ படத்தில் நடித்தார். தற்போது டிஸ்னி தயாரிக்கும் ‘ஸ்னோ ஒயிட்’ படத்தில் நடித்து வருகிறார்.

2008ம் ஆண்டு ஜார்ன் வர்சனோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலிமா, மாயா, டெனிலியா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 38 வயதாகும் கால் கடோட் தனது 4வது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் படத்தை சமூக வலைத்தளத்தி்ல் பகிர்ந்துள்ள அவர், “எனது அன்பு மகளே, வருக. பிரசவம் என்பது எளிதானது அல்ல. எனினும் நாங்கள் அதனை கடந்து வந்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்த உனக்கு நன்றி. எங்கள் இதயம் நன்றியுணர்வால் நிரம்பியிருக்கிறது. பெண்கள் நிறைந்த எங்கள் வீட்டுக்கு உன்னை வரவேற்கிறேன். அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

குழந்தைக்கு ‘ஓரி’ என்று பெயர் வைத்துள்ளார். ஹீப்ரூ மொழியில் அதற்கு, ‘என்னுடைய ஒளி’ என்று பொருள். கால் கடோட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours