இதைப் பலரும் ட்ரோல் செய்து மீம்களைப் பதிவிட்டு வைரலாக்கினர். இதற்கான காரனம் குறித்து பேசியுள்ளார் நடிகர் விஷால்.
ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள “ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஹரி, விஷால், சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் ரசிகர்கள் நடிகர் விஷாலிடம் சில கேள்விகளைக் கேட்க விஷாலும் அதற்கு பதிலளித்திருந்தார். அதில் ஒருவர், ‘நீங்க சாப்பிடுவதற்கு முன் மூன்று மதங்களின் கடவுளையும் வணங்குவதற்கானக் காரணம் என்ன?’ என்று விஷாலிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷால், “நான் 10 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். எனக்கு எல்லா மதங்களின் கடவுள்களும் ஒன்றுதான்.
+ There are no comments
Add yours