விஜய் திரைத்துறையிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்குவதாகக் கூறியதை அடுத்து ‘சினிமாவில் விஜய்யின் இடத்தை நிரப்பப் போவது இவர்தான்’ என பலரும் பல நடிகர்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக யாராவது கருத்து சொல்ல, அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவிடுகிறது. அப்படியான ஒரு காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ‘ரத்த பூமி’ என்ற படத்தின் பூஜை இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.
We should never take our place for granted saar. Uzachikittey iruntha thaan ivangoloda kalathula iruka mudiyum…
— CS Amudhan (@csamudhan) March 10, 2024
இதில் இப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர், ‘இவர்தான் அடுத்த தளபதி’ என்று அந்தப் படத்தின் நடிகரைப் பேசியதை நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக, இதைத் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ள விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, “நமக்கு ட்ஃப் காம்ப்பட்டிசன் கொடுப்பாங்க போலேயே சார்” என்று இயக்குநர் சி.எஸ் அமுதனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு சி.எஸ் அமுதன், ‘நாம இருக்கும் இடத்தைச் சாதாரணமாக நினைத்துக் கொண்டு சும்மா இருந்திடக் கூடாது சார். உழைச்சாதான் இவங்களோட காலத்துல இருக்க முடியும்” என்று பதிலளித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours