நடிகர் அஜித்குமார் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உடல் பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காதுகளுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததாகவும் இதனால் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்த நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலையில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் அஜித்தை நேற்று பல திரைப்பட இயக்குனர்கள் நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும் அவர்களுடன் நடிகர் அஜித் பேசி மகிழ்ந்ததாகவும், அதனால் வதந்திகளை பரப்ப வேண்டாம் என சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
மூளையில் கட்டி, தொடர்ந்து ஐசியு-வில் கண்காணிப்பு, படப்பிடிப்புகள் ரத்து, மூன்று மாதம் ஓய்வு என எந்த வதந்தியும் நம்ப வேண்டாம். அதேபோல் அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் கண்டிப்பாக செல்வார் எனவும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியானதில் இருந்து அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். திடீர் என்று என்ன ஆனது என தெரியாமல் குழம்பி போகி இருந்தனர். இது தவிர இணையத்தில் நிறைய வதந்திகளும் பரவ துவங்கியது.
Ajith sir health update :
A very important group meet happened at the hospital today .
We might see a pic tomorrow – and it will be very unexpected !!
Health wise – he is perfectly alright and out of the depression of losing his dear friend vettri duraisamy !
— Prashanth Rangaswamy (@itisprashanth) March 8, 2024
எப்போதும் தனது உடல் நிலையில் அக்கறை காட்டுபவராக இருந்து வருகிறார் அஜித். உடலில் சிறுபிரச்சனை என்றாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்தது தெரியவரவே உடனடியாக மருத்துவமனையில் தானாகவே அனுமதி ஆகி உள்ளார். தற்போது நலமாக வீடும் திரும்பி உள்ளார். அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளியானது. திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
மேலும் படிக்க | Ajith Kumar : அஜித்திற்கு மூளையில் கட்டியா? உண்மை என்ன? சுரேஷ் சந்திரா விளக்கம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours