2022-ல் வெளியான படத்தை இப்போது பார்த்துவிட்டு பாராட்டிய பிரித்விராஜ்

Estimated read time 1 min read

2022-ல் வெளியான படத்தை இப்போது பார்த்துவிட்டு பாராட்டிய பிரித்விராஜ்

08 மார், 2024 – 13:42 IST

எழுத்தின் அளவு:


Prithviraj-who-has-just-watched-the-film-released-in-2022,-praised-it-now

கடந்த 2022 நவம்பர் மாதம் மலையாளத்தில் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ என்கிற படம் வெளியானது. நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் என்பவர் இயக்கியிருந்தார். மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் பணத்தை குறிவைத்து நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக உருவாகி இருந்த இந்த படத்தில் வினீத் சீனிவாசன் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் கூட அதே போன்ற வரவேற்பை பெற்றது. இங்குள்ள பல பிரபல இயக்குனர்கள் இந்த படத்தை சிலாகித்து பாராட்டினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் பார்த்துள்ளார். உடனடியாக இதுகுறித்து இயக்குனருக்கு தனது பாராட்டுக்களை சோசியல் மீடியா மூலமாக தெரிவித்துள்ளார் பிரித்விராஜ்.

“இந்த படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் தான் இடம் பிடித்திருந்தது. ஆனாலும் சில காரணங்களால் என்னால் எப்படியோ பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறீர்கள். முகுந்தன் உன்னி என்னை ரொம்பவே கவர்ந்து விட்டான். தாமதமாக பார்ப்பதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அடுத்த படம் எப்போது வெளியாகும் என்கிற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours