நாகசைதன்யா படத்திற்காக உருவாக்கப்படும் பிரம்மாண்ட பாகிஸ்தானிய சிறை
08 மார், 2024 – 13:47 IST
தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தண்டேல்’. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க, ‘கார்த்திகேயா 2’ புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்க, அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட அங்குள்ள ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
அங்கிருந்து எப்படி தப்பித்து மீண்டும் இந்தியாவுக்கு அவர் திரும்புகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஒரு பாகிஸ்தானிய சிறை செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.
+ There are no comments
Add yours