Watch These Tamil Spiritual Movies On Lord Shiva 63 Nayanmargal In Mahashivratri 2024 | சிவராத்திரியில் இந்த சிவன் திரைப்படங்களை பாருங்கள் – பக்தி பரவசம் அடையுங்கள்

Estimated read time 1 min read

Mahashivratri 2024, Tamil Spiritual Movies: ஒவ்வொரு தமிழ் மாதந்தோறும், அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் அன்று கொண்டாப்படும். இதில் இரவு முழுவதும் சிறப்பு கால பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேகம், அலக்காரங்களுடன் சிவபெருமானை பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.  

அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி நாளை அதாவது மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த அற்புத தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும். மகா சிவாராத்திரி தினம் அன்று இரவு முழுவதும் தூங்காமல் பக்தர்கள் பூஜை செய்வார்கள். 

நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் விடிய விடிய வழிபாடு நடைபெற்றாலும், கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்வார்கள். வழிபாடு செய்யாவிட்டாலும், பரம்பதம் விளையாடுவது, இரவு முழுவதும் தூங்காமல் இருக்க நூற்றுக்கணக்கான முறை ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை எழுதுவார்கள்.

மேலும் படிக்க | மகாசிவராத்திரி பூஜை 2024: செய்ய வேண்டியதும்… செய்யக் கூடாததும்

இந்நிலையில், மகாசிவாரத்திரியின் போது இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் பார்க்கும் வகையில் சில பக்தி திரைப்படங்களை இங்கு காணலாம். குறிப்பாக, இந்த சிவன் சார்ந்த பக்தி திரைப்படங்கள் இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நந்தனார் 

1942ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பக்தி திரைபடம், நந்தனார். இந்த திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோஸின் எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தன் சரித்திரம் மூலக்கதையை கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் மீது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பண்ணை தொழிலாளியான நந்தனார் குறித்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.  

திருவிளையாடல்

1965ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து பெரு வெற்றி பெற்ற ‘திருவிளையாடல்’ படம்தான் சிவராத்திரியின்போது, அனைவருக்கும் முதலில் நியாபகத்திற்கு வரும். இந்த திரைப்படத்தை ஏ.பி நாகராஜன் இயக்கியுள்ளார். கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். திருவிளையாடல் புராணத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதில் இருக்கும் சிவனின் மொத்தம் 64 திருவிளையாடல்களில் இருந்து நான்கு தேர்வு செய்யப்பட்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.

திருவருட்செல்வர்

1967ஆம் ஆண்டு அதே ஏ.பி.நாகராஜன் இயக்கி, சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் திருவருட்செல்வர். இந்த திரைப்படத்திற்கும் கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். சேக்கிழாரின் பெரிய புராணத்தின் அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாகும். 

காரைக்கால் அம்மையார்

1973ஆம் ஆண்டு ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காரைக்கால் அம்மையார். இத்திரைப்படத்தில் முதிர்வயது காரைக்கால் அம்மையாராக கே.பி.சுந்தராம்பாளும், இளவயது புனிதவதியாக லட்சுமியும் நடித்திருந்தனர். 63 நாயன்மார்களில் இடம்பெற்ற மூன்று பெண்களில் ஒருவர்தான் காரைக்கால் அம்மையார். 

இந்த நான்கு திரைப்படங்கள் மட்டுமின்றி, ஞானக்குழந்தை, சிவ லீலை, பட்டிணத்தார், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை உள்ளிட்ட பக்தி திரைப்படங்களையும் நீங்கள் காணலாம். இவற்றில் பல யூ-ட்யூபில் இலவசமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மகா சிவராத்திரி முதல் மாறும் வாழ்க்கை: சிவனும் சனியும் இணைந்து அருள் பொழிவார்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours