Shaitaan: “என்னவளே… என் துணையே… என் பலமே…!" – ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா

Estimated read time 1 min read

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தனது இன்னிங்ஸை மீண்டும் தொடங்கினார். ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’ என்று பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்  அவரது நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத்  திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ போன்ற படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநர் விக்ரம்பால் இயக்கிய ‘சைத்தான்’ படத்தில் நடித்திருக்கிறார். அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Shaitaan movie

அமித் த்ரிவேதி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ‘சைத்தான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ஜோதிகா நடிப்பில் இந்தியில் வெளியான இத்திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள்  குவிந்து வருகின்றன.

இந்நிலையில் மனைவி ஜோதிகாவிற்கு தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா அவர் வெளியிட்டிருந்த அந்தப் பதிவில், “என்னவளே… என் துணையே… என் பலமே…!

‘சைத்தான்’ திரைப்படத்துடன் நீ மீண்டும் உன்னுடைய புதிய பயணத்தை தொடங்குகிறாய். நீ செய்யும் எல்லாவற்றுக்கும் நான் பெருமைப்படுகிறேன் நிறைய மரியாதையும்… பேரன்பும்!” என்று பதிவிட்டிருக்கிறார். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours