அப்பா ஆனார் சர்வானந்த்
07 மார், 2024 – 11:07 IST
முன்னணி தெலுங்கு நடிகர் சர்வானந்த். எங்கேயும் எப்போதும், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சர்வானந்த் கடந்த ஆண்டு, ஜூன் 3ம் தேதி ரக்ஷிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரக்ஷிதா ரெட்டி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை, முன்னிட்டு தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை சர்வானந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தங்களின் செல்ல தேவதைக்கு ‘லீலா தேவி மைனி’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours