Actor Ajith Kumar Health Update Latest News Suresh Chandra Clarifies About Rumours : நடிகர் அஜித்குமார் நேற்று தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றதை அடுத்து, அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காகத்தான் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது.
மருத்துவமனைக்கு சென்ற அஜித்குமார்:
‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் அஜித்குமார், நேற்று திடீரென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அஜித்திற்கு என்னவோ ஏதோ என ரசிகர்கள் பதறி விட்டனர். இந்த நிலையில், அவருக்கு ஒன்றுமில்லை என்றும், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது.
மூளையில் கட்டியா?
அஜித் மருத்துவமனைக்கு சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவரது மருத்துவ பரிசோதனை குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அஜித்தின் மூளையில் கட்டி இருப்பதாகவும் அதற்கான அறுவை சிகிச்சை 4 மணி நேரமாக நடைப்பெற்றதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து இது குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், இது குறித்து நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் எதுவும் தெரிவிக்காமலே இருந்தார்.
சுரேஷ் சந்திரா விளக்கம்:
அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல்கள் உண்மையல்ல என நடிகர் அஜித்குமாரின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார். அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
அஜித்துக்கு மூளையில் கட்டியும் இல்லை அறுவைச் சிகிச்சையும் இல்லை. விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மற்றும் அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி மரணத்துக்கு பின்னர் கொஞ்சம் மனதால் சோர்ந்து போனவர் நார்மல் செக்-அப்புக்குதான் அப்போலோ போனார்.
மேலும் படிக்க | அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்ள எவ்வளவு பணம் வழங்கப்பட்டது தெரியுமா?
போன இடத்தில் ஏதேதோ ஸ்கேன் உள்ளிட்ட சகல டெஸ்டுகளும் எடுத்த போது காதுக்கு கீழே உள்பகுதியில் சின்ன பல்ஜ் எனப்படும் புடைப்பு உள்ளதைக் கண்டறிந்து இதனால் பாதிப்பு ஏதுமில்லை.. அதே சமயம் அரை மணி நேரத்தில் இதை சரி செய்து விடலாம் என்று டாக்டர் சொன்னதை அடுத்து உடனடியாக சரி செய்ய சொல்லி விட்டார்..
இதை அடுத்து நேற்றே அந்த பல்ஜ் அரை மணி அவகாசத்தில் நீக்கப்பட்டு நேற்றிரவே ஜெனரல் வார்டுக்கு வந்துவிட்ட அஜித் இன்றே டிஸ்சார் ஆகி விடுவார். இந்த மைனர் ஆபரேஷனால் அவரின் எந்த பணியும், நடவடிக்கையும் ஒரு சதவீதம் கூட பாதிப்படையாது என்பதுதான் உண்மை..
மேலும் திட்டமிட்டப்பட்டி அடுத்த வாரம் அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கிறகு கிளம்பி விடுவார் என்பதுதான் நிஜமே தவிர நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் 3 மாத ஓய்வு என்பதெல்லாம் தவறான தகவல் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார். இந்த தகவலை மூத்த நிருபர் ஒருவருடன் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | விபத்தால் உடலில் ஏற்படும் குறைபாடுகள் மொத்த குடும்பத்தையும் முடக்கிவிடும் – சத்யராஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours