Maari TV Serial Online: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரவுடி கோவிலுக்குள் பக்தர் வேடத்தில் கோவிலுக்குள் புகுந்து சாமுண்டீஸ்வரியை கொல்லுவேன் என்று பிளான் போட்டிருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஜெகதீஷ் வீட்டில் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கும் போது இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் சோதனையிட வந்துவிட அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கின்றனர்.
மேலும் படிக்க | லால் சலாம் to லவ்வர்-இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?
மறுபக்கம் கோவிலில் மாரி அம்மன் வேடம் போட்டு ஆசி வழங்கிக் கொண்டிருக்க ரவுடி குத்துவிளக்கோடு போலீஸ் சோதனையை தாண்டி கோவிலுக்குள் நுழைகிறான். ஆனால் எங்கு தேடியும் சாமுண்டீஸ்வரி இல்லாத நிலையில் தாராவுக்கு போன் போடுகிறான். ரைடு நடக்க நேரத்தில் யாருக்கும் தெரியாமல் தாரா போன் பேச ரவுடி சாமுண்டீஸ்வரி பற்றி விசாரிக்க இன்கம் டேக்ஸ் ரைடு நடப்பதாக தாரா சொல்கிறார். இங்கே மாரி அவளது பூஜையை நல்லபடியாக முடிக்க நல்ல வேலை சாமுண்டீஸ்வரி அம்மா இங்க வரல என நிம்மதி அடைகிறாள்.
இங்கே தாரா வீட்டில் இன்கம் டேக்ஸ் சோதனை நிறைவடைந்து எங்களுக்கு ஏதோ தப்பான இன்பர்மேஷன் கிடைச்சிருக்கு, உங்களிடம் எல்லாவற்றிற்கும் கணக்கு சரியாக இருக்கிறது என்று மன்னிப்பு கேட்டு வெளியே கிளம்ப ஜெகதீஷ் நேரம் கோவில் திருவிழாவை முடிந்திருக்கும் நான் கோவிலுக்கு வரல என்று சொல்கிறார். ஆனால் தாரா இல்ல கண்டிப்பா கோவிலுக்கு போகணும் என்று சாமுண்டீஸ்வரி அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வர மாரி இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பதற்றத்துடன் நீங்க எதுக்கு மா இங்க வந்தீங்க என்று சாமுண்டீஸ்வரியிடம் கேட்க அவர் கோவில் திருவிழாவுக்கு வர முடியல, சரி சாமியாவது கும்பிட்டு போகலாம்னு வந்ததாக சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | ‘காமெடி கிங்’ கவுண்டமணி சொத்து மதிப்பு வெறும் இத்தனை கோடி தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours