Gal Gadot Latest News Tamil Wonder Woman Actress Gives Birth To 4th Child Check Her Emotional Instagram Post Here

Estimated read time 1 min read

Wonder Woman Actress Gal Gadot 4th Child : ஹாலிவுட் பட நடிகர்கள், நடிகைகளை வெளிநாட்டினருக்குதான் பிடிக்கும் என்றில்லை. இந்தியாவிலும் பல ஹாலிவுட் கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர். அப்படி, பல கோடி இந்திய இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்தான், வொண்டர் வுமன் பட நாயகி Gal Gadot. இவருக்கு தற்போது நான்காவதாக குழந்தை பிறந்திருக்கிறது. 

வொன்டர் வுமன் நாயகி:

உலகம் முழுவதும் ஹாலிவுட்டின் இரண்டு யுனிவர்கஸ்களுக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவைதான், மார்வல் மற்றும் டிசி. ஐயர்ன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா என பலர் நிரம்பியது, மார்வல் யுனிவர்ஸ். பேட்மேன், ஸ்பீட், சூப்பர் மேன், வொன்டர் வுமன் உள்ளிட்ட பலரை உள்ளடக்கியது, டிசி. ஆரம்பத்தில் காமிக் வடிவில் வெளியாகி வந்த இந்த புத்தகங்கள், அதன் பின்னர் படங்களாக மாறின. மார்வல் யுனிவர்ஸில், ஆண் ஹீரோக்களும் இருக்கின்றனர், பெண் ஹீரோக்களும் இருக்கின்றனர். இவர்களுக்கான தனித்தனி படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அவை ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. டிசியில் பல பெண் ஹீரோக்கள் இருந்தாலும், வொன்டர் வுமனுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான், Gal Gadot. இவரது கதாப்பாத்திரத்தை வைத்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த படம் மட்டுமன்றி, Fast & Furious போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும் படிக்க | Ajith Kumar : அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி! அய்யய்யோ என்னாச்சு? ரசிகர்கள் பதற்றம்..

4வது குழந்தைக்கு தாயானார்..

இஸ்ரேலிய மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர், கால் கடாட். இவருக்கு 2008ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஓரி என பெயர் வைத்திருக்கிறார்,  Gal Gadot. 

உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு..

Gal Gadot-ற்கு தற்போது 38 வயதாகிறது. தனது நான்காவது குழந்தை குறித்து அவர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், இந்த பிரசவம் எளிமையானதாக இல்லை என்றும், ஆனால் தான் அதை தாங்கிக்கொண்டு குழந்தையை வெல்கம் செய்துள்ளதாகவும் கூறியுளார். குழந்தைக்கு ‘ஓரி’என பெயர் வைத்ததற்கான அர்த்தத்தையும் அவர் பதிவிட்டிருக்கிறார். இது ஹீப்ரூ மொழி சொல்லாகும். இதற்கு, “எனது வெளிச்சம்” என்று அர்த்தமாம். தனது குழந்தையுடன் போட்டு எடுத்து அவர் பதிவிட்டுள்ள போஸ்ட், தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | மகளிர் தினத்தை பெண் பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours