மார்ச்-10ல் துவங்கும் மலையாள பிக்பாஸ் சீசன்-6
06 மார், 2024 – 12:44 IST
ஹிந்தியில் துவங்கப்பட்டு வரவேற்பை பெற்ற பிக்பாஸ் என்கிற ரியாலிட்டி ஷோ, பின்னர் தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் தொகுத்து வழங்க மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் தமிழ் பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது மலையாள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் மார்ச்-10ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
இதற்கு முன்னதாக பிக்பாஸ் ஷோவின் ஐந்து சீசன்களையும் நடிகர் மோகன்லால் தான் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த வருடம் 5வது சீசன் துவங்குவதற்கு முன்பே மோகன்லால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து சில விமர்சனங்கள் எழுந்ததுடன் அவருக்கு பதிலாக வேறு யாரவது மாற்றப்பட்டலாம் என சொல்லப்பட்டது. ஆனால் சீசன் 5ஐயும் முடித்துவிட்டு வெற்றிகரமாக 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறார் மோகன்லால்.
+ There are no comments
Add yours