Anna TV Serial Online: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் டிஎஸ்பி முத்துப்பாண்டிக்கு துப்பாக்கியை கண்டுபிடிக்க இரண்டு நாள் டைம் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முத்துப்பாண்டி டிஎஸ்பி திட்டிய கடுப்பில் வீட்டுக்கு வர இசக்கி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார். என்ன இது என்று கேட்க வெளியில போயிட்டு வந்தீங்க அதான் தண்ணி என்று சொல்லிக் கொடுக்க என்ன ஆள் வச்சு அடிச்சு துப்பாக்கியை திருடியது உன் அண்ணன் தான் அவன ஒழுங்கு மரியாதையா துப்பாக்கி கொடுக்க சொல்லு என்று சொல்கிறான்.
உடனே இசக்கி ஆறடி வளர்ந்து இருக்கீங்க உங்களோட பொருளை நீங்க பார்த்துக்க மாட்டீங்களா மத்தவங்க மேல பழி போடாதீங்க என்று சொல்ல பாண்டியம்மா ஒன்னும் இல்லாம வீட்டுக்கு வந்த வழிக்கு பேச்சை பாரு என்று அவமானப்படுத்தி பேச இருவருக்கும் வாக்குவாதம் நிர்வாக முத்துப்பாண்டி இசக்கி பிடித்து தள்ளிவிட அவள் சுவற்றில் மோதி கீழே விழுகிறாள்.
இதனால் இசக்கிக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்படுகிறது. மறுபக்கம் பரணி ஒரு சின்ன பையனுக்கு ஊசி போட போக அவன் பயப்பட சண்முகம் முகாமில் ஊசி போடப் போகும்போது பயந்த விஷயத்தை நினைத்து பார்க்கிறாள்.
மேலும் படிக்க | தமிழகத்தில் சக்கைபோடு போடும் மஞ்சுமெல் பாய்ஸ்! இதுவரை செய்த வசூல் எவ்வளவு?
இந்த நேரம் பார்த்து பாக்கியம் பரணிக்கு போன் போட்டு என்ன விஷயம் என்று சொல்லாமல் நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வாய் என்று சொல்லி போ பரணியின் வீட்டுக்கு போக அங்கு இசக்கி ரத்தம் சொட்ட தின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். முத்துப்பாண்டி செய்த வேலை தான் என்பதை அறியும் பரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | நடிகை ரெஜினாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours