சத்தமில்லாமல் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்கள். காடும் காடு சார்ந்தும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். நட்பே துணை படத்தை இயக்கி அன்பு படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதை வசனத்தை பார்த்திபன் எழுதுகிறார். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பே முடிந்துவிடும் என்கிறார்கள். படத்தில் ஐந்து சண்டைக்காட்சிகள் வருகிறது. விஜயகாந்தை மிஞ்சும் அளவிற்கு சண்டைக் காட்சிகளில் பின்னி எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். படம் வெளிவரும்போது இந்த சண்டைக்காட்சிகள்தான் சண்முக பாண்டியனுக்குப் பெரிய பிளஸ் ஆக இருக்குமாம். அவருக்குப் பெரிய பெயர் கிடைக்கும் என்கிறார்கள். முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது அரசியலிலும் தலைகாட்டும் எண்ணம் இருக்கிறதாம். தொடர்ந்து சினிமாவில் நடித்து அப்பாவின் இடத்தை நோக்கி போக வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். தொடர்ந்து படங்கள் செய்யும் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
இந்தப் படைத்தலைவன் கதையை விஜயகாந்த் கேட்டிருக்கிறார். அவர்தான் படைத்தலைவனுக்கு வெள்ளைக்கொடி காட்டியிருக்கிறார். கும்கி படத்தில் விக்ரம் பிரபு இருந்ததுபோலவே யானையோடு பழகித் திரிவதாகக் காட்சி அமைப்புகள் அமைந்திருக்கின்றன. படத்தை ஏப்ரல் 14 அன்று வெளியிடத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் ரிலீஸ் தள்ளிப் போகிறது. முழு படப்பிடிப்பும் கேரளக்காடுகளில் தான் நடந்திருக்கிறது.
+ There are no comments
Add yours