Latest Cinema News Nayanthara Vignesh Shivan Divorce Rumors Is It True Check Here

Estimated read time 1 min read

Latest Tamil Cinema News Nayanthara Vignesh Shivan Divorce Rumors : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர், நயன்தாரா. இவர் சர்ச்சையை விட்டு விலகினாலும், சர்ச்சைகள் என்னவோ இவரை விட்டு விலகுவதாக இல்லை. நயன்தாரா மட்டுமன்றி, எந்த ஒரு திரையுலகினரும் ‘ஹச்’ என தும்பினால் கூட அதை பெரிதாக்கி விடுகின்றனர், நெட்டிசன்கள். அது போன்ற ஒரு சம்பவம்தான் தற்போதும் அரங்கேயிருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம், வாங்க. 

காதல் டூ கல்யாணம்:

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கிட்டதட்ட 5 ஆண்டுகள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் ஆன கையோடு வாடகைத் தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறினார்கள். எப்போதும் சர்ச்சை, சலசலப்பு என ஹாட் டாப்பிக்காக நயன்தாரா இருந்து வருகிறார். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது, அன்னபூரணி பட விவகாரம் என இவரைச் சுற்றி எப்போதும் பிரச்சனைகள் சர்க்கரையை கண்ட எறும்பு போல பிரியாமல் இருக்கும், 

இப்படிப்பட்ட சூழலில் தான் வினேஷ் சிவன் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனை இயக்கும் படத்தில் இருந்து நயன்தாரா விலகினார். அதற்கு சம்பளப் பிரச்சனை என கூறப்பட்டது. தற்போது இன்ஸ்டாவில் நயன் ஐடியை வினேஷ் சிவன் அன் பாலோ செய்ததாக ஒரு செய்தி பரவியது. அதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் கதை கட்டி விட்டனர். அதற்கு ஏற்றார் போல உண்மையிலேயே விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயனை அன்பாலோ செய்திருந்தார். அதன்பிறகு அவர் மீண்டும் நயனை பாலோ செய்தார். 

மேலும் படிக்க | Manjummel Boys: தமிழகத்தில் சக்கைபோடு போடும் மஞ்சுமெல் பாய்ஸ்! இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

இவ்வளவு வதந்திகளுக்கும் காரணம் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோராளாம். ஆம் நயனின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து சில ஃபாலோயர்களின் பெயர் திடீரென காண்பிக்கப்படாமல் இருந்துள்ளது. பாலோ செய்தவர்கள் சிலர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன் பாலோ செய்தது போல காட்டியுள்ளது. அதனால் தான் வின்கேஷ் சிவன் அன் பாலோ செய்ததாக செய்தி பரவியது. 

தற்போது விக்கேஷ் சிவன் பாலோ செய்வது காட்டப்படுவதால் நயன் – விக்கி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இத்துணூண்டு பாலோக்காக 10 வருட காதல் ஜோடியை விவாகரத்து வரை நெட்டிசன்கள் இழுத்து சென்றதெல்லாம் ரொம்ப ஒவர் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

நயன்தாராவை சர்ப்ரைஸ் செய்த விக்னேஷ் சிவன்:

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண நாளின் போது, “கண்ணான கண்ணே” பாடல் பாடி நயன்தாராவை சர்ப்ரைஸ் செய்தார். அப்போது எடுத்த இன்னொரு வீடியோவை நயன்தாரா தற்போது பகிர்ந்துள்ளார். அதில், புல்லாங்குழல் வாசிப்பவர், “மறுவார்த்தை பேசாதே” பாடலை வாசிக்க, அருகில் இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு முத்த மழையாக பொழிகிறார், நயன். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இதை வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘தலைநகரம்’ பட நாயகியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours