அதே போல `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திபன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `சில குட் பை ரொம்பவே கடினம்! நிறைய மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. கடந்த நான்கு சீசன்களும் குடும்பமாக பயணித்த நினைவுகள் மறக்க முடியாதவை. உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆசீர்வாதத்திற்கும் என்றைக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் என் நன்றிகள்!’ எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே அந்த நிகழ்ச்சியின் நடுவர்களான செஃப் வெங்கடேஷ் பட்டும், செஃப் தாமுவும் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாகவும், வேறொரு புதிய நிகழ்ச்சியில் புதிய தளத்தில் விரைவில் சந்திப்போம் என்றும் பதிவிட்டிருந்தனர். திடீரென அந்தப் பதிவை செஃப் தாமு நீக்கிவிட்டார். அதற்கும் செஃப் வெங்கடேஷ் பட் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும் `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகியிருப்பது `குக்கு வித் கோமாளி’ ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பழைய கோமாளிகளாவது இந்த சீசனில் கலந்து கொள்வார்களா? இல்லை ஒட்டுமொத்தமாக புதியதொரு நிகழ்ச்சியாக இந்த சீசன் வரப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
+ There are no comments
Add yours