“போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். அவருக்கு நேற்று மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “வரலஷ்மி சரத்குமார் அவர்களும் மும்பை தொழிலதிபரான நிகோலப் சச்தேவ் அவர்களும் திருமணம் செய்ய முடிவெடுத்து 01.03.2024 அன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்துகொண்டனர். இருவரும் கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிச்சயதார்த்த விழாவில் சரத்குமார், ராதிகா மற்றும் வரலஷ்மி – நிகோலய் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள் கலந்துகொண்டனர். நிகோலாய் சச்தேவ், ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துகள் வரலஷ்மி – நிகோலய் சச்தேவ்!
+ There are no comments
Add yours