"இந்த நம்பர் பிளேட்டுக்குக் காரணம் கீர்த்திதான்!" – அப்பா அம்மாவுக்கு கார் பரிசளித்த அசோக் செல்வன்

Estimated read time 1 min read

அப்பா, அம்மாவுக்கு சர்ப்ரைஸாக புதிய கார் வாங்கிக்கொடுத்து, அவர்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.

‘போர் தொழில்’, ‘சபா நாயகன்’, ‘ப்ளூ ஸ்டார்’ என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகள் தந்த உற்சாகத்திலிருக்கிருக்கிறார் அசோக் செல்வன். இந்தச் சூழலில், கார் பரிசளிப்பால் பூரிப்பிலும் சந்தோஷத்திலும் இருக்கும் அசோக் செல்வனின் அம்மா, மலர் செல்வத்திடம் பேசினேன்.

அசோக் செல்வன் குடும்பத்தினர்

“அசோக் செல்வன் எப்போதும் அப்பா – அம்மாவை மகிழ்விக்கும் மகனாத்தான் இருந்திருக்கான். அவன் சினிமாவுல என்ட்ரி ஆன தொடக்கக் காலத்துல, படத்துக்குக் கிடைச்ச 1 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பணத்துலக்கூட அவனுக்கு எதுவும் வாங்கிக்காம தீபாவளிக்கு எங்களுக்கெல்லாம் ட்ரெஸ் வாங்கிக்கொடுத்தான். எனக்கு 12 ஆயிரம் ரூபாயில அழகான பட்டுப்புடவை மட்டுமில்லாம ‘உனக்கு அழகா இருக்கும்மா’ன்னு சொல்லி ஜிமிக்கியும் வாங்கிக்கொடுத்தான். இப்போ, பேர் சொல்லும் ஹீரோவாகிட்டான். ஆனா, அப்பா, அம்மா மேல வெச்சிருக்க பாசமும் மரியாதையும் குறையவே இல்ல. கூடுதலா மருமக கீர்த்தியோட அன்பும் சேர்ந்து கிடைக்கிறதுல ரொம்ப சந்தோஷம்.

சென்னை மழையின்போது மெக்கானிக் செட்டிலிருந்த எங்கள் ஸ்கோடா லாரா கார் முழுமையாக வெள்ளத்துல மூழ்கிடுச்சு. பழுது பார்த்தாலும் பழைய மாதிரி கார் சரியா போகல. என் கணவருக்குப் போன வருஷம் கொஞ்சம் உடம்பு முடியாம போய்டுச்சு. இப்போ, நல்லபடியா குணமாகிட்டாலும் எந்த வகையிலும் நாங்க சிரமப்படக்கூடாதுன்னு, அதுவும் என் கணவருக்கு ரொம்ப பிடிச்ச டொயோட்டா ஹைக்ராஸ் ஹைப்ரிட் காரைப் பரிசளிச்சான்.

கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன்

இந்த கார் வாங்கணும்னு கணவர் ரொம்பநாளா சொல்லிக்கிட்டே இருந்தார். இப்போ என் மகனும் மருமகளும் கணவரின் கனவை நிறைவேற்றிட்டாங்க. அதுவும், அவங்க வாங்கிக்கொடுத்த காரிலேயே ஒரு ஆச்சர்யம் காத்துக்கிட்டிருந்துச்சு. அது என்னன்னா, எங்கத் திருமணம் நடந்தது 1986-ம் ஆண்டு. அதே வருசத்துலேயே BF 1986 என நம்பர் பிளேட் வாங்கிக்கொடுத்து எங்களை இன்னும் சந்தோஷத்துல திக்குமுக்காட வெச்சுட்டான். இதுக்குக் காரணம், என் மருமக கீர்த்திதான்.

ரொம்ப முயற்சி எடுத்து இந்த நம்பர் பிளேட்டை வாங்கிக்கொடுத்திருக்காங்க கீர்த்தி. நம்பர் பிளேட் பக்கத்துலேயே வர்ற BF-ங்க்றதுக்கு Best Friends-ன்னு அர்த்தம். கணவன் மனைவியா இருந்தாலும் நானும் அவரும், இப்போ வரைக்கும் நல்ல புரிதலோட வாழ்க்கையை நண்பர்களாத்தான் கொண்டு போயிட்டிருக்கோம். எங்களைப் பார்த்து அசோக்கும் கீர்த்தியும் ஒருத்தரை ஒருத்தர் சமமா மதிச்சு நண்பர்களா வாழ்க்கையை நடத்திக்கிட்டிருக்காங்க. எங்களுக்கு அதுல ரொம்பவே பெருமைதான்.

காருடன் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்

அசோக் எப்போ சம்பாதிக்க ஆரம்பிச்சானோ, அதுலருந்தே எங்களுக்கு பார்த்துப் பார்த்து செஞ்சுட்டிருக்கான். பெத்தவங்களுக்கு மட்டுமில்லாம யாருக்கு என்ன கஷ்டம்னாலும் அப்படியே எடுத்துக்கொடுக்கிற குணம் அவனுக்கு. உதவி வேணும்னு கேக்காமலேயே கஷ்டப்படுறதைப் புரிஞ்சுக்கிட்டு செய்றவன் அவன்.

அப்படி இருக்கிறவன், பெத்த அப்பா அம்மாவை எந்த அளவுக்கு புரிஞ்சி வெச்சிருப்பான். அப்படித்தான், இந்த கார் வாங்கிக்கொடுத்ததும் உணர்த்துது. புது காரை வீட்டு முன்னாடி கொண்டு வந்து சர்ப்ரைஸா நிறுத்தின சந்தோஷத்தை வார்த்தைகள்ல விவரிக்கவே முடியாது. அந்த காரோட விலை 31 லட்சம் ரூபாய். ஆனா, என் மகனோட அன்பு இந்த உலகத்துல எல்லாத்தையும் விட விலைமதிப்பில்லாதது.

அசோக் செல்வன் பரிசளித்த கார்

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தருணங்களில் இதுவும் ஒண்ணு. என் வயித்துல பிறக்காமலே பெரிதுவக்கும் தருணங்களை மருமக கீர்த்தியும் கொடுத்துக்கிட்டே இருக்கிறதுல எங்க மனசு குளிர்ந்துக்கிட்டே இருக்கு” என்றபடி நெகிழ்கிறார் அசோக் செல்வனின் அம்மா மலர் செல்வம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours