Seetha Raman Zee TV Serial March 2 Update | சீதா ராமன் அப்டேட்: சீதாவை ஷாக்காக்கிய குடும்பம்.. நான்ஸிக்கு காத்திருக்கும் புது செக்மேட்

Estimated read time 1 min read

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா தன்னுடைய அம்மாவை வைத்து நான்சி தான் மகா என்று கண்டுபிடிக்க பிளான் போட அது பெயிலியர் ஆன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சீதாவை நம்ப மருக்கும் குடும்பத்தினர்

அதாவது சீதா கீழே வர அவளை பார்த்து எல்லாரும் சிரிக்க சீதா இது நான்ஸி இல்ல, மகா தான். மகா பயன்படுத்திய மாத்திரை, இன்ஹில்லர் எல்லாமே இவங்க பயன்படுத்துறாங்க என்று சொல்ல எல்லாரும் நம்ப மறுக்கின்றனர். 

சீதாவுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு: நான்சி

பிறகு கார்டனுக்கு சேதுவை வர சொல்லி சீதா விஷயத்தை சொல்ல சேதுவும் சிரித்து விட்டு மகா குடும்பத்தில் எல்லாருக்கும் இந்த பிரச்சனை இருக்கு, மாகாவோட அக்காவும் இப்படி தான் இருந்தா என்று சொல்கிறார். இந்த நேரம் பார்த்து இங்கு வரும் நான்ஸி சீதாவுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, அவளை ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிட்டு போகணும் என்று உள்ளே செல்கிறாள். 

மேலும் படிக்க | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி!

சீதாவுக்கு ஆறுதல் சொல்லும் ராம்

பிறகு சீதா அப்செட்டில் இருக்க ராம் ரூமுக்குள் வைத்து அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்க வீடு முழுக்க மைக்கை மறைத்து வைத்திருக்கும் நான்ஸி இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறாள். அப்போது இறந்தவங்க உடல் அடையாளம் கண்டுபிடிக்க முடியலைன்னா எப்படி இவங்க தானு கண்டு பிடிப்பீங்க என்று கேட்க ராம் டி என் ஏ டெஸ்ட் வைத்து தான் என்று சொல்ல சீதா அப்போது மகா உடம்புக்கும் நான்ஸிக்கும் DNA டெஸ்ட் எடுக்கலாம் என்று சொல்கிறாள். இதை கேட்டு நான்ஸி அதிர்ச்சி அடைகிறாள். 

இதனையடுத்து மகா போட்டோ முன்பு வந்து நிற்கும் நான்சி மகா செத்து போய்ட்டா இப்போ இந்த நான்சி தான் என்று சொல்ல மகா தான் நான்சியாக வந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours