Actress Varalaxmi Engagement With Mumbai Businessman Sarathkumar Radhika Poses With Happy Faces | வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா – மாப்பிள்ளை யார் தெரியுமா?

Estimated read time 1 min read

Actress Varalaxmi Engagement: நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்களின் திருமணமோ அல்லது அவர்களின் வீட்டுத் திருமண நிகழ்வோ நடைபெற்றால் ரசிகர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பார்கள். திருமணம் எப்போது, பிரபலத்திற்கும் யாருக்கும் திருமணம், பிரபலம் திருமணம் செய்பவரின் பின்னணி என்ன, அவர்களுக்கு நடப்பது காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து செய்யப்படும் திருமணமா என அனைத்து கேள்விகளுக்கும் பதில் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு இடையேயான திருமணம் இதற்கு ஒரு உதாரணம் எனலாம். அவர்களுக்கு எங்கு, எப்போது திரைப்படம் நடக்கிறது, அவர்களின் திருமண விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட்டன, அந்த திருமண நிகழ்வில் யாரெல்லாம் பங்கேற்றார்கள், நேரில் வந்தார்கள், இணையத்தில் வாழ்த்து சொன்னார்கள் ஆகியவற்றை கவனிக்க மக்கள் விரும்புகின்றனர். சமீபத்திய உதாரணம் என்றால், தற்போது குஜராத்தின் ஜாம் நகரில் முகேஷ் அம்பானியின் மகனின் ஆனந்த அம்பானியின் திருணத்திற்கு முந்தையை கொண்டாட்ட நிகழ்வையும் குறிப்பிடலாம். 

திருமண அறிவிப்பு ஒருபுறம் இருக்க, இந்த பிரபலத்திற்கு எப்போது திருமணமாகும், இவ்வளவு வயதாகிவிட்டதே அவர் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார், ஏதும் காதல் உறவில் இருக்கிறாரா போன்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் அடுக்கடுக்காக எழும். பிரபலங்கள் பட்டியலில் இதுபோன்ற அதிக கேள்விகளை எதிர்கொள்பவர்கள் திரைப்பட நடிகைகளும், மாடல்களும்தான் எனலாம்.

மேலும் படிக்க | தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எவ்வளவு கோடி தெரியுமா?

திரிஷா திருமணச் செய்தி எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கும் திரிஷா ரசிகர்களும் இன்னும் உள்ளனர். திரிஷா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலேயே பல நடிகைகள் மீது இந்த கேள்விகள் தொடுக்கப்படுவது உண்டு. இது தனிமனித உரிமையை மீறலாக கூறினாலும், ரசிகர்கள் அந்தளவிற்கு தங்களுக்கு பிடித்த நடிகைகளின் வாழ்க்கை மேல் அவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளனர் எனவும் கூறலாம். 

அந்த வகையில், நடிகையும், பிரபல நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி மீதும் ரசிகர்கள் தொடர்ந்து எப்போது திருமணம், எப்போது திருமணம் என அன்பு தொல்லைகளை அளித்த வந்த நிலையில், அவரின் நிச்சயதார்த்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது. வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், அவர்களுக்கு நேற்று மும்பையில் நிச்சயதார்த்தம் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான செய்தி வெளியீட்டில்,”வரலட்சுமி சரத்குமார், மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் ஆகியோருக்கு  திருமணம் செய்ய முடிவெடுத்து, மார்ச் 1ஆம் தேதியான நேற்று, மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையிலும், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வரலட்சுமி சரத்குமாரும், நிகோலய் சச்தேவ் ஆகியோர் கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் எனவும் அந்த செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார். மேலும், இருவருக்குமான நிச்சயதார்த்த நிகழ்வின் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் வரலட்சுமி மற்றும் நிகோலய் உடன் சரத்குமார், அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர். 

மேலும் படிக்க | Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours