பன்மொழி படமாக உருவாகும் ‘சத்தியமங்கலா’
01 மார், 2024 – 12:52 IST
ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் மற்றும் சசிரேகா நாயுடு இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்தியமங்கலா’. பிரபல ஆவணப்பட இயக்குனர் ஆர்யன் இயக்குகிறார். கோலி சோடா’ புகழ் முனி கிருஷ்ணா நாயகனாக நடிக்க, நாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். மல்யுத்த வீரர் தி கிரேட் காளி, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத் மற்றும் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்ய, வீர் சமர்த் இசையமைக்கிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் படம் பற்றி இயக்குநர் ஆர்யன் கூறியதாவது: காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக ‘சத்தியமங்கலா’ உருவாகி வருகிறது. பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தொடர்ந்து வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடக்கிறது என்றார்.
+ There are no comments
Add yours