English Pop Singer Rihanna Salary For Performing At Mukesh Ambani Son Anant Ambani Radhika Merchant Wedding

Estimated read time 1 min read

nglish Pop Singer Rihanna Salary for Performing At Anant Ambani Radhika Merchant Wedding : இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்தின் திருமண நிகழ்ச்சியில் ஆங்கில பாப் பாடகி ரிஹானா பாடல் பாட இருக்கிறார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

இந்திய முழுவதும் அம்பானி குடும்பத்தார்தான் தற்போது ட்ரெண்டிங் நம்பர் 1-ல் இருக்கின்றனர். ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு, ராதிகா மெர்செண்ட் என்பவருடன் திருமணம் ஆக உள்ளது. ஜூலை மாதம் நடைபெற இருக்கும் இவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்1ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஆங்கில பாப் பாடகி ரிஹானா பாடல் பாடுகிறார். 

ரிஹானா:

ஆங்கிலத்தில் உள்ள பிரபல பாப் பாடகிகளுள் ஒருவராக இருப்பவர், ரிஹானா. இவருக்கு உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர், பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது ஆனந்த அம்பானி-ராதிகா மெர்செண்டின் திருமண நிகழ்வில் இசைக்கச்சேரியை நடத்துகிறார். 

மேலும் படிக்க | பிக்பாஸிற்கு பிறகு அடையாளம் தெரியாமல் மாறிய சரவண விக்ரம்! என்னப்பா ஆச்சு?

ரிஹானா, சூப்பர் பவுள் எனும் நிகழ்ச்சியை 2016ஆம் ஆண்டில் நடத்தினார். அதன் பிறகு இவர் வேறு எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அதையெடுத்து அவர் நடத்த இருக்கும் பெரிய நிகழ்ச்சி இதுதான். ரிஹானா, காதல் பாடல்கள் மட்டுமன்றி இன்னும் சில பாப் பாடல்களையும் பாடியிருக்கிறார். ஆனால், இந்த திருமண நிகழ்வில் அவர் தனது காதல் பாடல்களை மட்டும் பாட உள்ளதாக கூறப்படுகிறது. 

அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டும் இவ்வளவா? 

இந்த நிகழ்ச்சி, இன்று (மார்ச் 1) நடைபெற்றுள்ளது. மாலை 5:30 மணியளவில் இவரது இசை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியை நடத்த, அவருக்கு 52 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மாலை ஷோ நடத்த ஒரு பாப் பாடகருக்கு இத்தனை கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இதுவே முதன்முறையாகும். 

மேலும் படிக்க | அல்ல அல்ல குறையாத சொத்துகளை வைத்துள்ள ஆனந்த் அம்பானி! மொத்தம் எவ்வளவு கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours