Ninaithen Vandhai Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சுடர் கவின் மற்றும் அஞ்சலியை மொட்டை மாடியில் குளிக்க வைத்துக் கொண்டிருக்க எழில் அங்கு வர அவன் மீது தண்ணீர் விழுந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, எழில் தண்ணீர் பட்டதும் டென்ஷனாக குழந்தைகள் நீங்களும் மொட்டை மாடியில் குளிக்க வந்தீங்களா என்று கலாய்த்து அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர். அதன் பிறகு கீழே வந்த எழில் காபி கேட்க செல்வி அதை கொண்டு வந்து கொடுக்க தமிழ் போட்ட காப்பி தான் சூப்பரா இருக்கும் என்று சொல்ல வீட்ல யாருமே இல்லையா எல்லாம் தமிழ் தமிழ் என்றாங்க என்று இன்னும் கடுப்பாகிறான்.
அடுத்ததாக தமிழ் ஸ்கூலை கட்டடிக்க வண்டியை பஞ்சராக்க முயற்சி செய்கிறான். ராமையாவை வண்டி எடுக்க சொல்ல வண்டி பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து சுடர் ஆட்டோவில் போக ஏற்பாடு செய்ய ஆட்டோவில் எல்லாம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான்.
பிறகு ஹாஸ்பிடல் கிளம்பும் எல்லாரையும் ட்ராப் செய்வதாக சொல்லி அழைத்துச் செல்ல ஸ்கூலில் விட்டுவிட்டு தமிழை வீட்டுக்கு போக சொல்ல அவள் நீங்கதானே கூட்டிட்டு வந்தீங்க நீங்கதான் கூட்டிட்டு போய் விடனும் நாங்க கூட தான் வருவேன் என்று காரில் அடாவடியாக உட்கார்ந்து கொள்கிறாள்.
இதனால் வேறு வழி இன்றி எழில் அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று ஹாஸ்பிடல் வரணும்னு சொன்ன வந்துட்டேன் இனிமே எனக்கு எதுவும் தெரியாது உள்ளே செல்ல மனோகரி இதை பார்த்து கடுப்பாகிறாள்.
பிறகு எழில் சூட்கேஸ்சை மறந்து ஹாஸ்பிட்டலுக்குள் சென்று திரும்ப தமிழ் சூட் கேஸை கொண்டு வந்து கொடுத்து தமிழ் இருக்க கவலை வேண்டாம் என்று சொல்ல இதை பார்த்து மனோகரி இன்னும் கடுப்பாகிறாள். மனோகரி மீட்டிங் குறித்து பேச எழில் தமிழ் என பெயரை மாற்றி சொல்ல இன்னும் கடுப்பாகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | Maari Serial: கை விட்டு போகும் சொத்துக்கள் – மாரி சீரியல் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours