Chidambaram S Poduval Movie Manjummel Boys Real Life Story What Happened In Guna Caves? மலையாள திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. மாலிவுட் திரையுலகை பொறுத்தவரை, அங்கு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படாத படங்களும் தாெடர்களும் கூட, நல்ல விமர்சனங்களையும் வரவேற்பினையும் பெற்று பல நாட்கள் திரையரங்குகளில் இடம் பெறுவதுண்டு. அப்படி, கடந்த 22 ஆம் தேதி (பிப்ரவரி) வெளியாகி மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் படம், மஞ்சுமெல் பாய்ஸ்.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் அப்படியென்ன ஸ்பெஷல்?
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவேல் என்பவர் இயக்கியுள்ளார். சோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம், தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் 101 நாட்களுக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
கேரள மாநில கொச்சியில் தங்கியிருக்கும் நண்பர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்காக வருகின்றனர். அப்படி வருகையில், கமலின் குணா படம் எடுக்கப்பட்ட குணா குகைக்கும் செல்கின்றனர். அதில், தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் அவர்களுள், ஒரு நண்பர் மட்டும் அக்குகையின் ஆபத்தான பகுதிக்குள் சிக்கி கொள்கிறார். அவரின் நிலை என்ன ஆனது? அவரை உயிருடன் மீட்டனரா? என்பதே இப்படத்தின் கதை.
உண்மையில் நடந்தது என்ன?
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்க காரணமாக இருப்பது, இப்படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற காரணம்தான். 2006ஆம் ஆண்டில் கொடைக்காணலுக்கு சென்ற நண்பர்களுள் ஒருவர் உண்மையாகவே குணா குகைக்குள் சிக்கிக்க்கொண்டுள்ளார். இவர்களின் இந்த அனுபவம்தான் தற்போது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ எனும் பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
உண்மை கதையை உருவாக்க நினைத்த 4வது இயக்குநர்..
உண்மையாகவே குணா குகையில் மாட்டிக்கொண்டவர்களை கேரளாவில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்று அழைக்கின்றனர். இவர்களின் கதையை படமாக எடுக்க இதற்கு முன்னரும் பல இயக்குநர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், பட்ஜெட் அதிகமாகும் என்ற காரணத்தினால் யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை. இறுதியில், தற்போதைய இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொடுவேல் முயற்சியினால் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ளவர்கள், உண்மையான மஞ்சுமெல் பாய்ஸ் உடன் 3 ஆண்டுகள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Deepika Padukone: கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர்.. குஷியில் ரசிகர்கள்
தமிழகத்தில் பலத்த வரவேற்பு..
மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு தமிழகத்தில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் சில தியேட்டர்களில் மட்டுமே இப்படம் வெளியாகியிருந்த நிலையில். படம் நன்றாக இருப்பதால் இதை பார்த்த பலரும் பாசிடிவான விமர்சனங்களை கொடுக்க ஆரம்பித்தனர். இதனால், படத்தின் காட்சிகள் நீட்டிக்கப்பட்டு, தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. சென்னை மட்டுமன்றி திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் இப்படத்திற்கான காட்சிகள் தியேட்டர்களில் இடம் பெற்றிருக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா?
மஞ்சுமெல் பாய்ஸ் படம், உலகளவில் தற்போது வரை 45 கோடி வரை கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் இப்படம், சுமார் ரூ.23 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். படம் வெளியான முதல் வாரத்தில், தமிழ் நாட்டில் மட்டும் ரூ.2 கோடி வசூலை தாண்டியுள்ளதாம். இன்னும் சில வாரங்களில் இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்து விடும் என கூறப்படுகிறது. பலரும் குடும்பத்துடன் இப்படத்தை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.
கமல்ஹாசன் பாராட்டு:
நடிகர் கமல்ஹாசன், மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவினரை நேரில் அழைத்து நேற்று பாராட்டு தெரிவித்தார். அவர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ படமும் தன்னை மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்க வைத்ததாக அதன் இயக்குநர் முன்னர் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | ப்ளூ ஸ்டார் முதல் ஈகில் வரை-இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களில் லிஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours