Thangalaan Actress Malavika Mohanan Marriage Rumour Is It True Check Details Here

Estimated read time 1 min read

Malavika Mohanan Marriage: மலையாள நாயகி மாளவிகா மோகனன், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கு திருமணம் என இணையத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. 

யார் இந்த மாளவிகா மோகனன்?

மலையாள திரையுலக மார்கெட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகள் பலர், அங்கு பல ஹிட் படங்களை கொடுத்தவுடன் தமிழ் சினிமாவிற்கு நுழைவது வழக்கம். அப்படி, மலையாள சினிமாவில் அறிமுகம் ஆன பிறகு தமிழ் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தவர், மாளவிகா மோகனன். இவர், பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகள். 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு, 2017ஆம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் ஃபாதர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

கேரளாவில் பிறந்து மும்பயில் வளர்ந்த இவருக்கு தற்போது 30 வயதாகிறது. கிட்டத்தட்ட 11 வருடங்களாக திரையுலகில் இருக்கும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்க | கார் விபத்தில் சிக்கிய ‘எதிர்நீச்சல்’ தொடர் நடிகை! ஆண் நண்பருடன் கைதா?

தமிழில் மாளவிகா நடித்த படங்கள்..

மாளவிகா மோகனன், தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் இவர் ரஜினிகாந்துடன் பிறக்காத சகோதரி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு, இவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர், தற்போது தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களுள் ஒருவராகவும் உள்ளார். 

திருமணமா? 

நடிகை மாளவிகா, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் செலிப்பிரிட்டிகளுள் ஒருவராக இருக்கிறார். அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது இவரது வழக்கம். அந்த வகையில், தற்போது கிராண்டாக ஆடை உடுத்தி ஒரு போட்டோ ஷூட் செய்துள்ளார். அதில், “இது எனது திருமணம் அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

பொதுவாகவே, நாயகிகள் போட்டோக்களை வெளியிட்டாலே பலர் “என்ன, அடுத்த கல்யாணமா..” என கேட்க ஆரம்பித்து விடுவர். அப்படி யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவர் இது எனது திருமணம் அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். மாளவிகா, இப்போதைக்கு திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கலான் படத்தில் மாளவிகா..

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம், தங்கலான். இந்த படத்தில் மாளவிகா மோகனன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக அவர் உடல் எடை மெலிந்து, பிரத்யேக சண்டை பயிற்சிகளை எடுத்திருக்கிறார். 

மேலும் படிக்க | படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருந்தவர்-அட இந்த நாயகியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours