மம்முட்டியை நேரில் சந்தித்த சமந்தா
27 பிப், 2024 – 15:00 IST
நடிகை சமந்தா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்த குஷி திரைப்படம் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர் எந்த படத்திலும் நடிப்பதற்காக கமிட்டாகவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், உடற்பயிற்சி குறித்த வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சமந்தா கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டுள்ளார்.
சமந்தாவை பொறுத்தவரை மலையாள நடிகர்களில் அவரது அபிமான நடிகர் என்றால் மம்முட்டி தான். அவ்வப்போது மம்முட்டி குறித்த சில தகவல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ள சமந்தா கடந்த வருடம் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் ‘காதல் : தி கோர்’ என்கிற படம் வெளியான போது அதில் மம்முட்டியின் நடிப்பை, துணிச்சலான முயற்சியை பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கொச்சி வந்துள்ள சமந்தா அங்கே மம்முட்டியை நேரிலேயே சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் சமந்தா.
+ There are no comments
Add yours