இந்த நிகழ்ச்சியின் பலமே கோமாளிகளும், நடுவர்களும்தான்! அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமுவும், செஃப் வெங்கடேஷ் பட்டும் இருந்தார்கள். ஸ்ட்ரிக்ட் ஆன நடுவர்களாக நாம் பார்த்துப் பழகியவர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடனும், கோமாளிகளுடனும் சரிசமமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்து அவர்களுடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டினார்கள். அந்த நிகழ்ச்சி அவர்களை அவர்களாக இருக்க வைத்தது என்றே சொல்லலாம். தற்போது அந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டு நடுவர்களும் விலகி இருக்கிறார்கள்.
சன் டிவியில் புதிதாக வரவிருக்கிற ரியாலிட்டி ஷோ ஒன்றில் இவர்கள் இருவரும் நடுவர்களாக வர இருக்கிறார்கள் என ஒருபுறம் சமூகவலைதள பக்கங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எந்த நிகழ்ச்சியின் வழியாக இருவரும் நம்மை என்டர்டெயின் செய்யப் போகிறார்கள் என்பதை இருவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours