2010ம் ஆண்டு `விண்ணைத் தாண்டி வருவாயா’ தெலுங்குப் படத்தில் ஆரம்பித்து (தமிழில் கேமியோ) குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்திய என பேன் இந்தியத் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சமந்தா.
‘பாணா காத்தாடி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘நான் ஈ’, ‘கத்தி’, ‘தெறி’ எனத் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். த்ரிஷாவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ’96’ படங்களின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து தமிழ், தெலுங்கு இரண்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பிடித்தார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று தனது சமகால உச்ச நட்சத்திரமான நயன்தாராவுடன் எந்தவித ஈகோவுமின்றி நடித்தார். தெலுங்கு, தமிழ் எனப் பெரும்பாலும் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்துவிட்டார் எனலாம்.
மயோசிடிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்து கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-இன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார்.
தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஒருசில படங்களிலும் கமிட்டாகி தனது பணியை மீண்டும் தொடந்து வருகிறார். அவர் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
வெற்றி, தோல்வி, தனிப்பட்ட வாழ்வில் விவாகரத்து, மயோசிடிஸ் பாதிப்பு எனப் பல சோதனைகள் வந்தாலும் எதையும் தனது சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு வெற்றி நடைபோடும் சமந்தாவிற்கு நயன்தாரா, பிரபல நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ‘பலருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன்’ என்றும் பாராட்டி வருகின்றனர். இது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
வாழ்த்துகள் சமந்தா!
+ There are no comments
Add yours