பிரபல தயாரிப்பாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான சிவசக்தி பாண்டியன் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் 1 கோடியே 70 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அந்தப் பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார். தொலைக்காட்சி நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் சிவசக்தி பாண்டியன் பணத்தை கொடுக்காததால் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் நீதிமன்றமும் பல தவணைகள் வழங்கியும் பணத்தை திருப்பித் தர முன்வராததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரது இல்லத்தில் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்ததனர்.
அஜித் பட தயாரிப்பாளர்:
சிவசக்தி பாண்டியன் தமிழில் சில படங்களை தயாரித்துள்ளார். இவர், தமிழில் முதன் முதலாக வான்மதி என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு, அஜித்குமார் நடித்த காதல் கோட்டை படத்தையும் தயாரித்திருந்தார். இப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து சூர்யா நடித்த காதலே நிம்மதி, முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க, பார்திபன் நடித்த வெற்றிக்கொடுக்கட்டு உள்ளிட்ட படங்களையும் தயாரித்தார். கடைசியாக தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு ‘சூரியன் சட்டக்கல்லூரி’ என்ற படத்தையும் தயாரித்தார். தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours