ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில், பாலிவுட் நடிகை யாமி கௌதம், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆர்டிகள் 370’.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை வளைகுடா நாடுகள் தடை செய்திருக்கின்றன. நெட்டிசன்கள் பலரும் பா.ஜ.க-வின் செயலை நியாயப்படுத்தவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அந்தக் கட்சிக்கான பிரசாரமாகவும் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகை பிரியாமணி விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “சிலர் இப்படத்தை பிரசாரப் படம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு விழிப்புணர்வு படம். இப்படத்தை நாங்கள் எடுக்கும்போது இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது.
இந்தச் சட்டப்பிரிவை நீக்கும் பணி வெற்றியடைவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டன என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தப் படத்தை நாங்கள் எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படக்கூட வாய்ப்புகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு சினிமா சுதந்திரத்தையும் இப்படம் பறிக்கவில்லை. இப்படத்தில் காட்டப்பட்ட அனைத்தும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours