Premalu Box Office Collection Movie Hit 50 Crores In Worldwide | வெறும் 5 கோடி பட்ஜெட் வசூலோ 50 கோடிகள் சாதனை படைக்கும் பிரேமலு

Estimated read time 1 min read

Premalu box office collection: “தண்ணீர் மாத்தன் தினங்கள்” மற்றும் “சூப்பர் சரண்யா” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியதற்காக புகழ்பெற்ற இயக்குனர் தான் கிரீஷ் ஏ.டி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் பிரேமலு. இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளர் இயக்குனர் கிரீஷ். ரோம்-காம் வடிவில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.  உலகளாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.51.9 கோடியைத் தாண்டி உள்ளது. நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமலு படம் தற்போதைய சினிமா உலகில் வெளியாகியுள்ள வித்தியாசமான காதல் திரைப்படம் ஆகும். இப்படம் பல இளைஞர்களின் மனதை கட்டி இழுதுள்ளது. கிரிஷ் ஏ.டி.யின் திறமையான இயக்கம் இந்த படத்தை நகைச்சுவையையும், இதய பூர்வமான படமாகவும் ஒரு தரமான சினிமா அனுபவத்தை நமக்கு தருகிறது.

மேலும் படிக்க | குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்! வேறு சேனலுக்கு செல்கிறாரா?

எளிமையான அதேசமயம் வசீகரிக்கும் கதைக்களத்தை கொண்டிருக்கும் பிரேமலு படம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையையும் கொண்டிருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது.  தனது இலட்சியங்களுக்கும் எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கவனத்தை பெறுகிறது.  இதனுடன், நஸ்லன் கஃபூர் சச்சினாக நிறைய இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். அவரது கதாபாத்திரம் இயல்பான, அதே சமயம் அழகையும் அப்பாவித்தனத்தையும் கொண்டு உள்ளது.

சங்கீத் பிரதாப்பின் அமல் டேவிஸின் கதாபாத்திரம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கிரீஷ் ஏ.டி.யின் இயக்கத்தில் உருவாகி இயக்கும் இந்த பிரேமலு மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள மற்றொரு சிறந்த படமாக அமைந்துள்ளது.  உண்மையில், இந்தப் படம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும், இது “பிரேமம்” மற்றும் “லவ் டுடே” போன்ற சிறந்த ரோம்-காம் படங்களுக்கு போட்டியாக உள்ளது. கூடுதலாக, மொழித் தடைகள் இல்லாத இத்திரைப்படத்தின் உலகளாவிய ஈர்ப்பு, கேரளாவில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் பரவலான வசூலில் பங்களிதுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில்  தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.  “பிரேமலு” பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மட்டுமல்லாமல், மலையாள சினிமாவின் ட்ரெண்ட்செட்டர் ஆக மாறி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா பயணமாக இப்படம் உறுதியளிக்கிறது.

மேலும் படிக்க | சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours