இது தொடர்பாக டப்பிங் யூனியன் தரப்பில் பேசிய போது, ‘மெம்பரா இல்லாதவங்களுக்கு ஒன் டைம் பேமென்டா இந்த மாதிரி கட்டறது வழக்கம்தான். கலையரசன் ஒரு படத்துக்கு டப்பிங் பேசிய போது அவர் பணம் கட்டியிருக்கார். வேறு சிலரும் இதே மாதிரி கட்டியிருக்காங்க.
அந்த வகையில் சின்மயியைப் பேச வைத்ததற்காக இந்தப் பணம் கட்டப்பட்டிருக்கு. தயாரிப்புத் தரப்புதான் இந்தப் பணத்தைக் கட்டணும். ஆனா இந்தப் படத்துக்கு சின்மயி குரல் வேணும்னு கேட்டது லோகேஷ்தான்னு சொல்றாங்க. அதனால அவர் தர்பபுல இருந்து வந்து ஐம்பதாயிரம் கட்டியிருக்காங்க.
இதை நாங்க வரவேற்கிறோம். இதையே நல்லவொரு அறிகுறியா எடுத்துக்கிட்டு டப்பிங் யூனியனுக்கு சின்மயி திரும்பவும் வந்தாலும் வரவேற்போம்” என்கிறார்கள்.

ராஜேந்திரனிடமும் நாம் பேசினோம்.
”சின்மயி விவகாரத்துல எது நிஜமோ எது நடந்ததோ அதையே நான் பேசினேன். விகடன்ல பேசறதுக்கு முன்னாடி சங்க கூட்டத்துலயே இந்த விவகாரத்தை நான் எழுப்பியிருந்தேன். ஒரு படைப்பாளியா படத்துக்கு யார் தேவைங்கிறதை இயக்குநர் முடிவு செய்யலாம். ஆனா எல்லா கிராஃப்ட்லயுமே ஒரு யூனியன்னு வர்றப்ப அதுக்குச் சில சட்டதிட்டங்கள் இருக்கும். அதுக்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறதுதான் ஆரோக்கியமானதா இருக்கும். தம்பி லோகேஷ் கனகராஜ் பணம் கட்டிட்டார்னு நானும் கேள்விப்பட்டேன். அவருக்கு என் நன்றி” என்றார் அவர்.
+ There are no comments
Add yours