Indian 2 Release Date Revealed | லீக்கானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு.. உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்

Estimated read time 1 min read

Indian 2 Release Date Update : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிதுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் விரிவாக காண்போம்.

இந்தியன் 2 திரைப்படம்:
கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 (Indian 2) திரைப்படம். இந்த படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இதுவரை படத்தின் போஸ்டர்களும், அவ்வப்போது சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அதை தவிர்த்து படம் குறித்த எந்த அப்டேட்களையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. 

மேலும் படிக்க | ஹாய் நன்னா படத்திற்கு பிறகு நானி நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா?

இந்தியன் 2 டிஜிட்டல் உரிமை :
இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT நிறுவனமான நெட்ஃபிக்ஸ் பரபரப்பான விலைக்கு வாங்கியுள்ளது.  இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோலிவுட்டில் அனைவரும் மிக ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இந்தியன் 2 ஆகும். தற்போது இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தியன் 2 ரிலீஸ் தேதி :
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என முதற்கட்ட செய்திகள் வெளியாது, ஆனால் தற்போது கேம் சேஞ்சர் என்கிற படத்தை இயக்குனர் ஷங்கர்இயக்கி வருவதால், இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிய தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் இந்தியன் 2 ரிலீஸ் மே மாதம் செய்ய தற்போது படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி மே 16 அல்லது 30ம் தேதி இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது வரை இது தொடர்பான எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவில்லை, கூடிய விரைவில் அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபலங்கள் இந்த வீடியோவை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது இந்தியன் 3 படமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் படத்திற்கான செலவு ஏற்கனவே அதிகமாகி உள்ளதால், 2 இரண்டு பாகங்களாக வெளியிட்டால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.  இதனால் இந்தியன் 3 படத்திற்காக கூடுதலாக சில காட்சிகளை படமாக்க உள்ளனர். 

மேலும் படிக்க | வெறும் 5 கோடி பட்ஜெட்! வசூலோ 50 கோடிகள்! சாதனை படைக்கும் பிரேமலு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours