நடிகை தந்த வீடியோ ஆதாரம்; நடிகருக்குத் தடை – தொலைக்காட்சி நடிகர் சங்கப் பொதுக்குழு முடிவு | Television actors association meeting news

Estimated read time 1 min read

இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவிவர்மா மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரவி வர்மா அடுத்து வரும் மூன்று தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதுடன், சங்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி கிடையாது.

இந்த நடவடிக்கைக்கானக் காரணம் குறித்துக் கூட்டத்துக்குச் சென்றவர்கள் சொல்லியது இதோ!

தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்தில் தற்போது சிவன் தலைவராகவும், போஸ் வெங்கட் பொதுச் செயலாளராகவும் இருக்கின்றனர். இவர்கள் இந்தப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் தலைவராக இருந்தார் ரவிவர்மா. அவரது பதவிக்காலத்தில் நடிகர், நடிகைகளைக் கூட்டிச் சென்று மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி பண மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நடிகர் போஸ் வெங்கட்

நடிகர் போஸ் வெங்கட்

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் இந்தப் பிரச்னையின் காரணமாகவே ரவி வர்மா தோல்வியடைந்தார். இருந்தாலும் அவரது அணியில் போட்டியிட ராஜ்காந்த், தினேஷ் ஆகிய சிலர் வெற்றி பெற்றார்கள். போஸ் வெங்கட் அணி வெற்றி பெற்றதுமே பழைய நிர்வாகத்தில் நடந்த தவறுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours