சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள ‘ஜோசுவா இமை போல் காக்க’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகும் படம் இது. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார். கிருஷ்ணா, ராஹி, திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர்: மொத்த ட்ரெய்லரிலும் சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் இல்லை. தொடக்கத்தில் ஒரு காதல் காட்சி, பின் எல்லாமே சண்டைக் காட்சிகளாக கோக்கப்பட்டு இருக்கிறது. கத்தி, ரத்தம், துப்பாக்கி என சண்டைக்கும், அதற்கு பின்னணி இசைக்கும் ஏற்ற கட்ஸ் கவனிக்க வைக்கிறது.
ஆபத்திலிருக்கும் பெண்ணை மீட்டு வீடு கொண்டு சேர்ப்பதே நாயகனின் பணியாக இருக்கும் என ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களுக்காக இயக்கிய படமாக இல்லாமல் கடமைக்கு எடுத்த படமாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ட்ரெய்லர் வீடியோ: