Did You Know Actor Vinod Raj Was Chiyaan Vikrams Father Check Photos Here

Estimated read time 1 min read

Chiyaan Vikram Father: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், விக்ரம். ரசிகர்களால் ‘சியான்’ விக்ரம் என அழைக்கப்படுகிறார். பாலா இயக்கிய ‘சேது’ படத்தில் ‘சியான்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அவருக்கு சியான் விக்ரம் என பெயர் வந்தது. விக்ரமின் மகன் துருவ், சினிமாவிற்கு வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது தந்தையும் ஒரு நடிகர் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 

விக்ரமின் தந்தை:

தமிழ் திரையுலகில் கடின உழைப்பிற்கு பெயர் போன நடிகர்களுள் ஒருவர், விக்ரம். இவர் சினிமாவில் வளர்ச்சி அடைந்த நாளில் இருந்து இவரது முகத்தை மட்டுமே மக்கள் பார்த்து வந்தனர். இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு விக்ரமின் மகனும் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். விக்ரமின் மகளுக்கு கலைஞரின் கொள்ளு பேரனான மனு ரஞ்சத்திற்கு திருமணம் செய்து வைத்தார் இதைத்தாண்டி, விக்ரம் சினிமாவில் வளர்வதற்கு முன்னர் டப்பிங் செய்து வந்தார் என்பதை அனைவருக்கும் தெரியும். ஆனால், இவரது தந்தையும் ஒரு நடிகர்தான் என்பது உங்களுக்கு தெரியுமா? 

Vinod Raj

மேலும் படிக்க | அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

கில்லி பட நடிகர்..

விக்ரமின் தந்தை வினோத் ராஜ், தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கில்லி படத்தில் த்ரிஷாவிற்கு தந்தையாக நடித்திருப்பார். விக்ரமுடன் கந்தசாமி படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். இது தவிர திருப்பாச்சி படத்திலும் விஜய்க்கு தந்தையாக நடித்திருக்கிறார். இவர், கடந்த 2017ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

விக்ரமின் அடுத்தடுத்த படங்கள்..

நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் பாகம் 1, 2 ஆகிய இரண்டு படங்களிலும் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அசத்தியிருந்தார். பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருடன் இணைந்து, மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இப்படம், இந்த ஆண்டில் வெளியாக உள்ளது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றங்கள்! இந்த வாரம் டாப்பில் உள்ள சீரியல் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours