Amitabh Bachchan: சரயு சொகுசு நகரில் ரூ.14.5 கோடிக்கு நிலம்; அயோத்தியில் குடியேறும் அமிதாப் பச்சன்! | Amitabh Bachchan bought land for Rs 14.5 crore to build a house in Ayodhya

Estimated read time 1 min read

அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அயோத்திக்கு எப்போதும் இல்லாத அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சனும் அயோத்தியில் 10,000 சதுர அடி நிலத்தை வாங்கியிருக்கிறார். 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட சரயு நகரில் இந்த நிலத்தை அமிதாப் பச்சன் வாங்கி இருக்கிறார்.

அயோத்தி சரயு

அயோத்தி சரயு
AP

இந்த சரயு நகர் மொத்தம் 51 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நகரமே வரும் 22ம் தேதிதான் முறைப்படி திறக்கப்படுகிறது.

அமிதாப் பச்சன் வாங்கியிருக்கும் நிலத்தின் மதிப்பு ரூ.14.5 கோடியாகும். இந்தப் புதிய நகரத்தை லோதா நிறுவனம் உருவாக்குகிறது. அதில் அமிதாப் பச்சன் வீடு கட்டத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “எனது இதயத்தில் இடம் பிடித்த அயோத்தியின் சரயு நகரில் என் பயணத்தைத் தொடங்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours