‘பர்த்மார்க்’ படத்திற்காக கர்ப்பிணி பெண்கள் பற்றி ஒரு வருடம் ஆய்வு : இயக்குனர் தகவல்
23 பிப், 2024 – 13:45 IST
‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், மிர்னா மேனன் நடித்துள்ள ‘பர்த்மார்க்’ படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கி உள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் பேசியதாவது:
குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ‛பர்த் மார்க்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்த வந்த விஷயம் என்பதால்தான். கடந்த 2 வருடங்களாக ஒவ்வொரு விஷயமும் ‘பர்த் மார்க்’ போல எங்கள் கூடவே ஒட்டிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு 1999ல் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின், டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும்.
மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு, அதன் எடை போலவே உண்மையான புராஸ்தெடிக் வயிறு மிர்னாவுக்கு செய்து கொடுத்தோம். அதை வைத்துக் கொண்டே அவர் படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார். அது பெரிய விஷயம். போர் வீரனுடைய மனநிலை மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மாற்றங்கள் என அனைத்தையும் முறையாக ரிசர்ச் செய்துதான் உருவாக்கி இருக்கிறோம். இதற்கே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது என்றார்.
+ There are no comments
Add yours